
அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல்
மதுரை அய்யப்பநாயக் கன்பட்டி ஊரணி தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 43), அரசு பஸ் டிரைவர். மகாலிங்கம் சித்திரை திருவிழாவை யொட்டி பணியில் இருந்தார். அப்போது திண்டுக்கல் ரோடு பஸ் நிறுத்தம் அருகில் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து பஸ்சை வழிமறித்தனர்.
இதனை மகாலிங்கம் கண்டித்தார். இதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் உருட்டு கட்டையால் அவரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பிச் சென்று விட்டனர். இது தொடர்பாக மகாலிங்கம் செல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
