
சேத்தியாத்தோப்பு அருகே ஓடும் பஸ்சில் 7 பவுன் நகை கொள்ளை
கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதி சேர்ந்தவர் மாலிக் ஜான் தில்ஷாத் பேகம் (வயது 48) சம்பவத்தன்று புவனகிரி பங்களா பஸ் நிறுத்தத்திலிருந்து தனது மகள் வீட்டிற்கு வடலூர் செல்ல சிதம்பரத்திலிருந்து வந்த சேலம் பஸ்சில் ஏறி சென்றார்.
சேத்தியாத்தோப்பு அருகே பஸ் வந்த போது தனது கட்டைப் பையில் வைத்திருந்த 4 பவுன் ஆரநெக்லஸ், 3 பவுன் நெக்லஸ் என மொத்தம் 7 பவுன் நகையை காணவில்லை. ,என்ற சந்தேகத்தில் சேத்தியாத்தோப்பு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
