தமிழக-ஆந்திர எல்லையான ஊத்துக்கோட்டையில் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் சென்னையை சேர்ந்த நபர் ஒருவரை கைது செய்த போலீசார்..!
திருவள்ளூர் மாவட்டம்
1/ஜூன்/2021 செவ்வாய்கிழமை
தமிழக ஆந்திர எல்லையான ஊத்துக்கோட்டை பகுதியில் தொடர்ந்து மதுபாட்டில்கள் கடத்தி வருவது வாடிக்கையாகி வருகிறது இந்த நிலையில் இன்று சென்னை வியாசர்பாடியை சேர்ந்த சரவணன் (23) என்பவர் ஆந்திராவில் இருந்து வாங்கி வரப்பட்ட 80 மதுபாட்டில்களை தனது ஆட்டோவில் மறைத்து சென்னைக்கு கடத்தி செல்ல முயன்றுள்ளார்
அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ஊத்துக்கோட்டை காவல்துறையினர் சரவணன் வந்த ஆட்டோவை மடக்கி சோதனையிட்டனர்
அதில் சட்டவிரோதமாக சுமார் 80 மதுபாட்டில்கள் கடத்த முயன்றது தெரியவந்தது பின்னர் ஆட்டோவையும் மது பாட்டில்களையும் பறிமுதல் செய்த ஊத்துக்கோட்டை காவல்துறையினர் சரவணன் என்பவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் …