

குத்தல அள்ளி கிராமத்தில் கிணறு தூர் வாரும் போது தலையில் கல் விழுந்து கூலி தொழிலாளி பலி .
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே கன்னிப் பட்டியை சேர்ந்தவர் கிணறு வெட்டும் தொழிலாளி வடிவேல் (வயது.63) இவர் இன்று காலை பாலக்கோடு அருகே குத்தலஅள்ளி கிராமத்தை சேர்ந்த முத்துராஜ் என்பவரின் விவசாய கிணற்றில் தூர் வாரும் பணியில் ஈடுபட்டிருந்தார், அப்போது கிணற்றின் மேல் இருந்த கல் ஒன்று கிணற்றின் உள்ளே இருந்த வடிவேல் தலையின் மீது விழுந்தது,
இதில் பலத்த காயம் ஏற்பட்டு தலையில் இருந்து இரத்தம் வழிந்தது,
உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்தார்.
இதுகுறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
