பாலக்கோடு அருகே
கஞ்சா செடி வளர்த்த விவசாயி கைது
பாலக்கோடு அருகே உள்ள ரெட்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் தர்மன் (வயது 30). விவசாயி. இவர் வீட்டின் பின்புறம் கஞ்சா செடி வளர்த்து வருவதாக பாலக்கோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று ரெட்டியூர் கிராமத்தில் உள்ள தர்மன் வீட்டுக்கு சென்ற போலீசார் பின்புறம் பார்த்தபோது 1% அடி உயரம் கொண்ட கஞ்சா செடி வளர்த்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தர்மனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.