
தனியார் நிறுவன ஊழியருக்கு கத்திக்குத்து
தெற்குவாசலில் உள்ள எலக்ட்ரிகல் நிறுவனத்தின் சூப்பர்வைசர் சையது அப்துல் கபூர் (வயது45). இவர் வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு தென்றல் நகரைச் சேர்ந்த சைவம் (59) என்பவரிடம் ரூ.5 லட்சம் கடன் பெற்றார். இவர் தி.மு.க. பிரமுகர் ஆவார். பைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறார். அவர்களுக்குள் கடன்தொகையை கணக்கிட்டு செட்டில் செய்வதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதில் முன் விரோதம் இருந்தது.
சம்பவத்தன்று தெற்கு வாசல் பகுதியில் இருந்த சையது அப்துல் கபூரை, சைவம் அவதூறாக பேசி யதுடன் கத்தியால் குத்தினார். காயமடைந்த சையது அப்துல் கபூர் இதுகுறித்து தெற்குவாசல் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து தி.மு.க பிரமுகர் சைவம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
