
தொழிலாளி பரிதாப சாவு; வாலிபர் உள்பட 5 பேர் படுகாயம்
சிவகங்கை மாவட்டம், மழவராயனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 33). தொழிலாளியான இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் திருப்பாச் சேத்திக்கு சென்றுவிட்டு ஊருக்கு வந்து கொண்டி ருந்தார். அப்போது பரமக்குடியில் இருந்து எதிர்புறமாக வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாய மடைந்த கருப்புசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து திருப்பாச் சேத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் பிரவீன்குமார் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
காளையார்கோவில் அருகே உள்ள உருவாட்டி கொங்கந்திடல் பகுதியை சேர்ந்தவர் ராக்கு (57). இவர் காளையார் கோவில் பஸ் நிறுத்தம் அருகே நடந்த சென்றபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் ராக்கு காயமடைந்தார். விபத்து குறித்து காளையார் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
உருவாட்டி பாப்பாக் கோட்டையை சேர்ந்தவர் சிவக்குமார் (43), இவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
மானாமதுரை அருகே உள்ள இடையமேலூரை சேர்ந்தவர் குருசாமி (48). இவர் அங்குள்ள பஸ் நிறுத்தம் பகுதியில் நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி காயமடைந்தார். விபத்து தொடர்பாக மானாமதுரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருப்பாச்சேத்தியை சேர்ந்தவர் சுந்தரம் (75). இவர் அந்தபகுதியில் நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிள் மோதி காயமடைந்து ஆஸ்பத்திரி யில் சிகிச்சை பெற்று வருகிறார்.
காரைக்குடி அருகே உள்ள செக்காலை பகுதியை சேர்ந்தவர் ஜான்சன் (25). இவர் சம்பவத்தன்று காரை ஓட்டிச்சென்றபோது நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த ஜான்சன் மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
