Police Department News

தலையில் கல்லைபோட்டு காய்கறி வியாபாரி கொலை

தலையில் கல்லைபோட்டு காய்கறி வியாபாரி கொலை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டையை அடுத்த பெரியகோட்டை கிராமத்தை சேர்ந்தவர் அடைக்கலம் (வயது 45). இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவியும், முருகே சன் (22) என்ற மகனும் உள்ளனர். சூரக்குடி பகுதி யில் அடைக்கலம் காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.

இந்த நிலையில் தான் பார்த்து வந்த வியாபாரத்தை விட்டு விட்டு சில ஆண்டு களுக்கு முன்பு அடைக்கலம் வேலைக்காக திருப்பூருக்கு சென்றார். அங்கு ஒரு கம்பெனியில் வேலை பார்த்தபோது அடைக்கலத்துக்கும், வேறொரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அடைக்கலம் அந்த பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பெரியகோட்டைக்கு அடைக்கலம் அந்த பெண்ணை அழைத்து வந்து தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார். இந்த செயல் மகன் முருகேசனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக தந்தை-மகனுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. நேற்று இரவும் இவர்களுக்குள் தகராறு ஏற்பட ஆத்திரமடைந்த முருகேசன் தந்தை அடைக்கலம் தலையில் கல்லை போட்டு தாக்கினார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த கொலை குறித்து தகவலறிந்த சாக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை தொடர்பாக போலீசார் முருகேசனை கைது செய்த னர்.

வேறொரு பெண்ணை திருமணம் செய்து ெகாண்டு குடும்பம் நடத்தியதால் மகன் தந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.