Police Department News

பாலக்கோடு அருகே 2ஆண்டுகளாக குடிநீர் குழாயில் தண்ணீர் வராததால் பொதுமக்கள் வேதனை- கட்சி மோதலில் கிராம மக்கள் பாதிப்பு .

பாலக்கோடு அருகே 2ஆண்டுகளாக குடிநீர் குழாயில் தண்ணீர் வராததால் பொதுமக்கள் வேதனை- கட்சி மோதலில் கிராம மக்கள் பாதிப்பு .

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம், எர்ரணஹள்ளி ஊராட்சியில் உள்ள ரெட்டியூர், வி.செட்டிஏரிபள்ளம், சமத்துவபுரம் உள்ளிட்ட கிராம பகுதிகளுக்கு ஒன்றிய பொதுநிதியிலிருந்து கடந்த 20-2021ம் ஆண்டில் ரெட்டியூர் கிராமத்தில் உள்ள 30ஆயிரம் லிட்டர் நீர்தேக்க தொட்டியிலிருந்து வி.செட்டிஏரி பள்ளம் வரை ஒகேனக்கல் குடிநீர் வழங்க 2.40லட்சம் ரூபாய் மதிப்பில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் இரண்டு ஆண்டுகள் கடந்தும் தற்போது வரை இப்பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை.
குடிநீர் குழாய் அமைக்கப்பட்ட பகுதி புதர்மண்டி காட்சி பொருளாகிஉள்ளது .
மேலும் தற்போது கோடைகாலம் என்பதால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் கிராமமக்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ஒகேனக்கல் குடிநீர் எடுத்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில் எர்ரனஅள்ளி ஒன்றிய குழுக கவுன்சிலர் அழகுசிங்கம் திமுகவை சேர்ந்தவர், இவர் 2 இலசட்த்து 40 ஆயிரம் ரூபாயில் ஒகேனக்கல் குடிநீர் குழாய் இனைப்பு வழங்கி உள்ளார்.
எர்ரனஅள்ளி ஊராட்சி மன்றதலைவர் பாமகவை சேர்ந்தவர் என்பதால்
திமுக கவுன்சிலர் வழங்கிய திட்டத்தை செயல்படுத்த விடாமல் கிடப்பில் போட்டுள்ளார்.
இவர்களின் கட்சி மோதலில் கிராம மக்கள் குடிக்க தண்ணீர் இன்றி அவதிப்பட்டு வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழக முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதிக்கு தண்ணீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.