
தளவாய் அள்ளியில் சூதாடிய 5 பேர் கைது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் சூதாட்டம் நடைப்பெறுவதாக பாலக்கோடு போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது,
இதையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது தளவாய்அள்ளி கிராமத்தில் உள்ள மசூதி அருகே சிலர் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.
போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றவர்களை பிடித்து விசாரித்ததில் நல்லம்பள்ளியை சேர்ந்த குமார் (வயது.30), எர்ரனஅள்ளி பகுதியை சேர்ந்த முனியப்பன் (வயது.33), வீராசாமி (வயது.27) அழகேசன் (வயது .37), மாதையன் (வயது .30) என்பது தெரிய வந்தது. 5 பேரையும் கைது செய்து
அவர்களிடமிருந்து சீட்டு கட்டுக்கள் மற்றும் 4 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
