பிரபல ரவுடி பிறந்தநாள் விருந்து – ஆயுதங்களுடன் வந்த 10 ரவுடி கைது
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பனையக் குறிச்சி மேல தெருவை சேர்ந்த கொம்பன் ஜெகன் (எ) ஜெகதீசன் ( 29) இவன் மீது பல கொலை வழக்குகள் உள்ள நிலையில், கூலிப்படையாகவும் செயல்பட்டு வருவதுடன் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி ஜெகன் தனது பிறந்தநாள் விழாவையொட்டி திருச்சி பகுதியில் போஸ்டர்கள் ஓட்டியுள்ளனர். சொந்த ஊரில் வான வேடிக்கை முழங்க கார் மீது அமர்ந்து ஊர்வலம் சென்று உள்ளன்.
பின்னர் நண்பர்கள் மத்தியில் பிறந்தநாள் கேக் வெட்டி உள்ளான். இந்த பிறந்தநாள் விழாவில் ஜெகனுடன் தொடர்புடைய பல ரவுடிகள் கலந்து கொண்டுள்ளனர். அதனை தொடர்ந்து 20ம் தேதி இரவு பிறந்தநாள் விழா விருந்து என அவனது கூட்டாளிகளுக்கு கிடா கறியுடன் ஜெகன் வீட்டில் விருந்து கொடுத்துள்ளான்.
அப்பொழுது அவனது கூட்டாளிகள் அரிவாள், கத்தி, உள்ளிட்ட ஆயுதத்துடன் வந்து அந்த விருந்தில் கலந்து கொண்டுள்ளனர். இச்சம்பவம் பற்றி திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் தலைமையிலான திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெகன் மற்றும் அவனது கூட்டாளிகான தஞ்சாவூர் இராவுசாபட்டியை சதீஷ்குமார் (28),
அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (30), மதன்குமார் (30), சத்யராஜ் (34), தஞ்சாவூர் இன்னத்துக்கான்பட்டியை சேர்ந்த திவாகர் (30), திருச்சி புத்தூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்த ஹரிஹரன் (25), மேட்டு தெரு புது மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சதீஷ்குமார் (26), மேல சிந்தாமணி எஸ் எஸ் கோவில் தெருவை சேர்ந்த ராஜ்குமார் (29), வடக்கு காட்டூர் பிரசாத் (32) ஆகிய 10 பேரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்தனர்.
அப்படி கைது செய்து போலீசார் வாகனத்தில் அழைத்து சென்றப்போது போலீசார் வாகனத்தில் கண்ணாடியை ஜெகன் தலையில் மோதிகொண்டு அடம் செய்து உள்ளான். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஜெகனின் பிறந்தநாள் விழாவிற்காக நண்பர்களுக்கு விருந்து கொடுத்ததாகவும், மேலும் செலவுக்கு காசு வேண்டுமென்றும்
அதற்கு என்ன செய்யலாம் என்று திட்டம் போட்டு கொண்டிருந்ததாகவும் கூறியுள்ளனர். அதன் அடிப்படையில் அவர்கள் 10 பேரையும் திருவெறும்பூர் போலீசார் திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.