இந்திய சாட்சிய சட்டம் குறித்து அனைவரும் அறிவது அவசியம்
மக்களிடம் டிஜிட்டல் தொழில் நுட்ப பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் இந்திய சாட்சிய சட்டம் குறித்து அனைவரும் அறிவது அவசியம் என உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் தியாகராஜன் கூறியுள்ளார்.
இ-மெயில் எஸ்.எம்.எஸ்.,ஆடியோ பதிவுகள் வீடியோக்கள் மற்றும் பிற டிஜிட்டல் தரவுகள் போன்ற மின்னனு பதிவுகளின் பரவலான பயன்பாட்டில் எழும் சவால்களை எதிர்கொள்ள 1872 ம் ஆண்டு இந்திய சாட்சிய சட்டத்தை திருத்தி 65 B என்னும் பிரிவு 2000 ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த பிரத்தியேக சட்டப்பிரிவு குறித்து சைபர்சொசைட்டி ஆப் இந்தியா சார்பில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் குழு விவாத கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
சைபர் சொசைட்டி ஆப் இந்தியா தலைவரும் வழக்கறிஞருமான கார்த்திகேயன் இந்த சட்டத்தை அணுகும் முறைகள் குறித்து பேசினார்
தொழில் நுட்ப ரீதியாக அணுகுவது குறித்து சைபர் சொசைட்டி ஆப் இந்தியா துணைத்தலைவர் விஜயகுமாரும் டிஜிட்டல் தரவுகளை திரட்டி நீதிமன்றத்தில் சமர்பிப்பது குறித்து தரவுகள் பாதுகாப்பிற்கான நிபுணர் கூட்டமைப்பான எப்.டி.பி.பி.ஐ. என்ற அமைப்பின் தலைவர் விஜயசங்கர் விளக்கினார்.
மேலும் டிஜிட்டல் உபயோகிப்பாளர்கள் என்ற தலைப்பில் சைபர் சொசைட்டி ஆப் இந்தியா முன்னால் தலைவர் பாலுசாமிநாதன் பேசினார். இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் தியாகராஜன் பேசியதாவது மொபைல் போன் உள்ளிட்ட பல்வேறு மின்னனு டிஜிட்டல் தொழில் நுட்ப வசதியும் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. இந்திய சாட்சிய சட்டம் 1872 ன் பிரிவு 65 B குறித்து அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்
சைபர் சொசைட்டி ஆப் இந்தியா போன்ற பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன
ஆனாலும் 70 சதவீத வழக்கறிஞர்களுக்கு இந்த சட்டம் குறித்து விழிப்புணர்வு இல்லை மின்னனு ஆதாரங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என இந்த சாட்சிய சட்டம் சொல்கிறது
நீதி மன்றத்தில் வழக்குகள் வரும்போது இந்த சட்டத்தின் வழி முறைகளை பின்பற்றிய. ஆதாரங்கள்தான் முக்கியமானதாக இருக்க வேண்டும் எல்லாவற்றையுமே ஆதாரமாக நீதிமன்றம் எடுத்து கொள்ளாது.
இந்த சட்டத்தை பயன்படுத்தி பல்வேறு முக்கிய வழக்குகளை உச்ச நீதிமன்றம் எவ்வாறு கையாண்டுள்ளது என்பதை வழக்கறிஞர்கள் பார்க்க வேண்டும்
டிஜிட்டல் தொழில் நுட்ப பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் இந்திய சாட்சிய சட்டத்தின் அடிப்படை அம்சங்களை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் அப்போதுதான் ஏமாற்றத்தை தவிர்க்க முடியும் தேவைக்கு மட்டுமே டிஜிட்டல் உபகரணங்களை பயன்படுத்துவது நல்லது
இவ்வாறு அவர் பேசினார்.