
தர்மபுரி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்
தருமபுரி மாவட்ட காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளில் சமரச தீர்வு காண குறைத்தீர்க்கும் முகாம் மாவட்ட எஸ்.பி.அலுவலகத்தில் நடைபெற்றது.
தருமபுரி மாவட்டத்தில் 28 காவல் நிலையங்கள், மாவட்ட குற்றபிரிவு மற்றும் நில அபகரிப்பு பிரிவு என மொத்தம் 30 காவல் நிலையங்கள் உள்ளன. இந்த காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காண சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இம்முகாமில் 134 மனுக்கள் வந்தது. இதில் 111 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது. இந்த முகாமில் எஸ்.பி அலுவலகத்தில் எஸ்.பி ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் ஏடிஎஸ்பிக்கள் இளங்கோவன், பாலசுப்பிரமணியன், டிஎஸ்பிக்கள் செந்தில்குமார், ராமச்சந்திரன், காவல் ஆய்வாளர், நவாஸ் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் அன்பழகன் மற்றும், உதவிக்காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
