
பாலக்கோடு நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் கவிதா அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் மாரண்டஅள்ளி நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்படுவதாக தகவல் .
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு நெடுஞ்சாலைதுறை கோட்டப் பொறியாளர் கவிதா அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது, மாரண்டஅள்ளி – பஞ்சப்பள்ளி நெடுஞ்சாலையில் நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகள், வணிக வளாகங்கள், ஆகியவற்றை வரும் மே.29 ம் தேதிக்குள் ஆக்கிரமிப்பாளர்கள் தாங்களாகவே அப்புறப்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் வரும் மே.30 ம் தேதி ஜே.சி.பி மூலம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடம் மீட்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
