பாலக்கோட்டில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகளை வழங்கிய
முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தனியார் திருமண மண்டபத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழாவினை முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன்,எம்.எல்.ஏ.,
குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் .
நிகழ்ச்சிக்கு ஏ.ஆர்.டி.எஸ். தொண்டு நிறுவன இயக்குனர் ஆனந்தன் வரவேற்புரை ஆற்றினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சிந்து ,மாவட்ட சுற்றுச்சூழல் துணை பொறியாளர் லாவண்யா, மருத்துவர்கள் மோகனப்பிரியா, பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசியதாவது உலக சுற்றுச்சூழல் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5-ந் தேதி கடைபிடிக்கபட்டு வருகிறது.
இயற்கை வளங்களான நீர்நிலைகள், காடுகள், வன உயிரினங்கள், வளிமண்டலம், பறவைகள், சோலைகள், கடற்கரைகள், மனிதர்கள் உள்பட அனைத்து உயிரினங்களும் வாழ சுற்றுச்சூழல் சமநிலையில் இருக்க வேண்டும். நவீன விஞ்ஞான, தொழில்நுட்ப, தொழில்துறை வளர்ச்சியின் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது. இரசாயனக் கழிவுகள், புகை போன்றவை நீர் நிலைகள், வளிமண்டலம் போன்றவற்றை மாசுபடுத்துவதால் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. சுற்றுச் சூழலை மனிதர்கள் பாதுகாப்பது மிக முக்கியமானதாக கருதப்படுவதாக தெரிவித்தனர்.
ஏஆர்டிஎஸ் தொண்டு நிறுவனம் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக 450 நபர்களுக்கு தென்னங்கன்றுகள் மற்றும் மருத்துவ கல்வி உதவி தொகையாக 1.41லட்சம் ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தோழமை தொண்டு நிறுவன பொறுப்பாளர் செல்வராஜ், செந்தில்ராஜா ,ஹைன் தாமஸ், ரங்கநாயகி, கற்பகவல்லி, துரைமணி மற்றும் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.