Police Recruitment

பாலக்கோடு தனியார் கல்லூரி வளாகத்தில் தனியார் பள்ளி கல்லூரி வாகனங்கள் ஆய்வு .

பாலக்கோடு தனியார் கல்லூரி வளாகத்தில் தனியார் பள்ளி கல்லூரி வாகனங்கள் ஆய்வு .

தமிழக அரசு பள்ளி மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்திடும் வகையில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய உத்தரவிட்டிருந்தது.
அதனை தொடர்ந்து
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, காரிமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் 38 தனியார் பள்ளிகளின் 260 பள்ளி வாகனங்களில்
இதில் முதல் கட்டமாக
85 வாகனங்களை பாலக்கோடு தனியார் கல்லூரி வளாகத்திற்க்கு வரவழைக்கபட்டு வாகனங்களை பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் பள்ளி வாகனங்களில் அவசர கால வழி, பள்ளி பேருந்தில் கண்காணிப்பு கேமரா மற்றும் ஜி.பி.எஸ் கருவி, தீயணைப்பு கருவி, முதலுதவி பெட்டி, வாகனத்தின் தரைதளம், ஆகியவை சரியாக உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் தீயணைப்பு கருவியை பயன்படுத்துவது குறித்து அனைத்து ஓட்டுநர்களுக்கு செயல்விளக்கமும், வாகனங்களில் தீப்பிடித்தால் எவ்வாறு அனைப்பது குறித்தும்,
ஓட்டுநர்களுக்கு ஹேன்ட் பிரேக்கின் பயன்பாடு குறித்தும், வாகனங்களை பாதுகாப்பாக இயக்குவது குறித்தும் அறிவுரை வழங்கினார்.
ஆய்வின் போது குறைபாடுகளுடைய 7 வாகனங்கள் கண்டறியப்பட்டு, அவ்வாகனங்களின் குறைகளை நிவர்த்தி செய்து ஒரு வார காலத்திற்குள் மீண்டும் ஆய்விற்கு ஆஜர்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து மீதமுள்ள வாகனங்களை 2ம் கட்டமாக ஆய்வு செய்யப்படும் என்றும்.
இந்த ஆய்விற்கு வராத பள்ளி வாகனங்கள் பொதுச்சாலையில் இயக்குவது கண்டறியப்பட்டால் வாகனம் சிறைப்பிடித்து கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆய்வின் போது பாலக்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் உடனிருந்தார்

Leave a Reply

Your email address will not be published.