
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கோவிலை உடைத்து நகை திருட்டு
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள சண்முகாபுரம் கிராமத்தில் வீரம் கொண்ட அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் நிர்வாகியாக அதே ஊரில் கீழத்தெருவில் வசிக்கும் பாலசுப்பிர மணியன்(வயது 53) என்பவர் இருந்து வருகிறார்.
சம்பவத்தன்று அவர் கோவிலுக்கு சென்று பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டு இருந்த 4 கிராம் எடை கொண்ட தங்கப்பொட்டு திருட்டு போயிருந்தது.
இதுதொடர்பாக பாலசுப்பிரமணியன் ஊத்துமலை போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்மநபரை தேடி வருகின்றனர்.
