தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பிரசாரம் செய்த காவலர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராஜா சிங்க மங்களம் காவல் நிலையம் சார்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளுடன் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற எண்ணம் வாகனம் ஓட்டுபவர்களிடமிருந்தே வர வேண்டும்,
இரு சக்கரவாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர் இருவரும் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.
தங்களின் குடும்பத்தின் காவலுக்காக என்பதை உணர்ந்து, தலைக்கவசம் அணியுங்கள் உங்கள் தலைமுறைகளைக் காப்பாற்றுங்கள் என்றும்,
தீயணைப்பு வாகனம், அவசர ஊர்தி போன்றவைகளுக்கு தடையின்றி வழிவிடுதல் அவசியமாகும் என்றார்
காவல் உதவி ஆய்வாளர் மாரிவேல்.
மேலும் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து வந்தவர்களை பாராட்டினார்.
