

வேலம்மாள் கல்வி குழுமத்தில் 700 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு வழங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர்
மதுரை தெப்பக்குளம் பகுதி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. அ. தங்கமணி அவர்கள் தனது காவல் பணியை சிறப்பாக செய்வதோடு அவ்வப்போது பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வுகளையும் வழங்கி வருகிறார் அதிலும் குறிப்பாக மாணவச் செல்வங்களுக்கு அவர்கள் கல்வி கற்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கே நேரடையாக சென்று அவர்களுக்கு போக்குவரத்து விதி முறைகளையும் அவர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கும் தகுந்த வழிகாட்டுதல்களை வழங்கி வருவது அவரது வழக்கம் சட்டங்கள் என்பது இரண்டு வகைப்படும் அவை இயற்கை சட்டம் இயற்றப்பட்ட சட்டம் இவைகள் இரண்டுமே குற்றமில்லா மனித வாழ்வுக்கு அவசியம் மனிதனை தவிர மற்ற உயிரினங்கள் அனைத்தும் இயற்கையை அனுசரித்தே வாழ்கின்றன ஆனால் மனிதன் மட்டுமே இயற்கை சட்டத்தையும் இயற்றப்பட்ட சட்டத்தையும் மீறி குற்றங்கள் புரிந்து நாட்டிற்கு தீங்கு விளைவிக்கிறார் மாணவ செல்வங்கள் இதனையுணர்ந்து சட்டப்படி வாழ கற்றுக்கொள்ளவும் நமது இந்திய தேசத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லவும் பாடுபட வேண்டுமென்பார். இவ்வாறிருக்க இவர் நேற்று 30.05.23. அன்று வேலம்மாள் கல்வி குழுமம் சார்ந்த 700-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு,, மாணவர்கள் மேம்பாடு பற்றிய விழிப்புணர்வுகளை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் பல முன்னனி பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
