
கருக்கனஅள்ளியில் விவசாய கிணற்றில் நீச்சல் பழக சென்ற +2 மாணவி நீரில் மூழ்கி சாவு.
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சாமனூர் கிராமத்தை சேர்ந்த கலையரசி ( வயது.16),
இவர் நேற்று மகேந்திரமங்கலம் அருகே கருக்கனஅள்ளியில் உள்ள தனது சித்தி வீட்டிற்க்கு வந்தவர் நீச்சல் பழகுவதற்காக சிறுமிகளுடன் சேர்ந்து அதே பகுதியில் உள்ள மனோகரன் என்பவரது விவசாய கிணற்றிற்க்கு சென்றார்.
நீச்சல் பழகி கொண்டிருக்கும் போது திடிரென நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
தகவலறிந்த பாலக்கோடு தீயனைப்பு துறையினர், மாணவியின் உடலை மீட்டு பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மகேந்திர மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
