
கசியம்பட்டி மேம்பாலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் கூலி தொழிலாளி படுகாயம்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கணபதிகொட்டாய் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி மனோகரன் (வயது .52) இவர் இன்று மாலை வேலை முடித்துவிட்டு தர்மபுரியிலிருந்து பாலக்கோடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.
பாலக்கோடு அருகே கசியம்பட்டி மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மனோகரன் மீது நேருக்கு நேர் மோதியதில் மனோகரன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயக்கமானார்.
உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்,
மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவலறிந்த பாலக்கோடு போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
