
குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 167(2)b, பிரிவு 209 மற்றும் பிரிவு 309(2) ஆகியவைகள் சம்பத்தப்பட்ட ஒரு வழக்கு கர்நாடக அமர்வு உயர் நீதிமன்றத்தில் நீதி அரசர்கள் H.G.Ramesh மற்றும் John micheal gunha அவர்கள் முன்னிலையில் வந்தது
குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 167 ஒரு நபர் கைது செய்யப்பட்ட பிறகு 24 மணி நேரத்திற்குள் குற்றம் சம்பந்தப்பட்ட விசாரணை முழுமையாக முடிவடையாத சந்தர்ப்பங்களில் புலன்விசாரணை செய்யும் காவல்துறை அதிகாரி அருகாமையில் உள்ள ஜூடிசியல் நீதிபதி முன்னிலையில் அவரை ஆஜர் படுத்தி ரிமாண்டை 15 நாட்களுக்கு நீட்டிப்பு செய்திடலாம் அதன் பிறகு நேரிலோ தேவைப்பட்டால் தவிர்க்க முடியாத காரணங்களினால் வீடியோ மூலமாகவோ நீதிபதி முன் ஆஜர் படுத்தி குற்றத்தின் தன்மையை பொருத்து நீட்டிப்பு செய்திடலாம்.
ஒரு நபர் கைது செய்யப்பட்டு முறைப்படி ஜூடிசியல் நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டு ரிமாண்டில் வைக்கப்பட்டார் விசாரணை காலம் முடிந்த பிறகு அவரை மறுபடியும் நீதிபதியின் முன் ஆஜார் படுத்தாமல் காவலை நீட்டிப்பு செய்ததால் தன்னை விடுதலை செய்திட வேண்டும் அல்லது ஜாமின் வழங்கிட வேண்டும் என உயர் நீதி மன்றத்தில் மனு செய்திட்டார்
உயர் நீதி மன்றம் இந்த வழக்கை பொருத்தவரை குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 167(2)b மற்றும் 209 விதிகளின்படி குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை மேலும் ரிமாண்டு நீட்டிப்பும் வழங்கப்படவில்லை
ஆனால் குற்றத்தின் தன்மையை பொறுத்து ஒரு முறை ஆஜர்படுத்தி ரிமாண்டு செய்யப்பட்ட குற்றவாளியை முக்கியமான அடிப்படை காரணங்களின் பொருட்டு மறுபடியும் ஆஜர் படுத்தாமலேயே நீதிபதிகள் ரிமாண்ட்டு நீட்டிப்பு செய்திடலாம் என்று கூறி மனுதாரரின் கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்து தீர்ப்பளித்தது.
