தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் மதுவை அதிக விலைக்கு விற்க வைத்திருந்தவர் கைது.
கம்பைநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாவளவன் தலைமையில் போலீசார் இருமத்தூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது இருமத்தூர் பகுதியில் ஒரு மூட்டையை வைத்து கொண்டிருந்தவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். அதனை கண்ட போலீசார் அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர் இருமத்தூர் பகுதியை சேர்ந்த முனியன் மகன் சீனிவாசன் என்கிற ஆட்டுக்காரன் என்பதும் இவர் கூடுதல் விலைக்கு விற்பதற்காக அரசு மதுபாட்டில்களை வாங்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. மேலும் போதை அதிகமாக ஏறுவதற்காக ஊமத்தக்காய் மற்றும் இலையை அரைத்து அதில் ஊற்றி வைத்து இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சீனிவாசனை கைது செய்து அவரிடம் இருந்து 24 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.