Police Recruitment

நீதி மன்ற தீர்ப்புக்கள்இல்வாழ்க்கை துணையா? தொல் வாழ்கை துணையா?(M.P.Hight Court M.P394 /2017 sandeep singh bais vs state of M.P)

நீதி மன்ற தீர்ப்புக்கள்
இல்வாழ்க்கை துணையா? தொல் வாழ்கை துணையா?(M.P.Hight Court M.P394 /2017 sandeep singh bais vs state of M.P)

சமீப காலங்களில் ஒரு கணவன் மனைவியை கொடுமை படுத்துவது அதிகரித்து வருகிறது. சார் நிறுத்துங்கள் இது தவறு என்று ஆண்கள் கூறுகிறார்கள்

இன்னும் எத்தனை காலம்தான் ஆண்கள் மீது இந்த குற்றச்சாட்டுகளை சுமத்தி கொண்டே இந்த மனைவிமார்கள் இருக்கப்போகிறீர்கள் உங்களுக்கு தெரியுமா? ஆண்கள் நல பாதுகாப்பு சங்கம் கணவர்களை மனைவிகளிடமிருந்து காப்பாற்றும் சங்கம் என. நிறைய அமைப்புகள் உள்ளன. மனைவிகள் கணவர்களை கொடுமை படுத்துகிறார்கள் என்பதுதான் உண்மையில் அதிகரித்து வருகிறது.

நிறைய கணவர்கள் இதை வெளியில் சொல்லுவதில்லை இவைகலெல்லாம் உண்மையில் உண்மைதானா? என்ற ஆராட்ச்சி ஒரு பக்கம் இருக்கட்டும் சமீப காலங்ளில் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 498-A/323 மற்றும் வரதட்சணை தடுப்பு சட்டம் 1961 பிரிவு 3,4, ஆகியவைகளின் கீழ் நிறைய மனைவிகள் கணவரையும் அவரது குடும்ப உறுப்பினர்களையும் தண்டித்திட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு பொய் வழக்கை பதிவு செய்து வருகின்றனர்

இது போன்ற ஒரு வழக்கு மத்திய பிரதேச உயர் நீதி மன்றத்தில் சமீபத்தில் வந்தது. ஒரு பெண் தன் கணவர் மீதும் எந்த வகையிலும் சம்பந்தமில்லாத வேறு இடத்தில் வாழ்ந்து வந்த அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது வழக்கு பதிவு செய்திட்டார்

முறையாக ஆதாராமில்லாமல் மனைவி கணவர் உறுப்பினர்கள் மீது குற்றம் சாட்டி வழக்கு பதிவு செய்திருப்பதை நீதி மன்றம் கண்டித்தது. இது போன்ற வழக்குகளில் உச்ச நீதி மன்றம் பொய் புகார் பதிவு செய்திட்ட மனைவிக்கு கடுமையான எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

Kansraj vs state of punjab (2000) scc 207 என்ற வழக்கிலும் Monjuroy vs state of west bengal (2015) 13 scc 693 என்ற வழக்கிலும் உச்ச நீதி மன்றம் அளித்த தீர்ப்புகளை மேற்கோள் காட்டி மத்திய பிரதேச உயர் நீதி மன்றம் பொய் புகாரளித்த பெண்ணின் வழக்கை தள்ளுபடி செய்தது.

Leave a Reply

Your email address will not be published.