
கள்ளத்தனமாக மது விற்ற பெண் கைது
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதிக்கு ட்பட்ட ராஜீவ் நகரில் கள்ளத்தனமாக அரசு மது பாட்டில்கள் பதுக்கி விற்பதாக பென்னாகரம் காவல்துறை கண்கா ணிப்பாளர் மகாலட்சுமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவர் உத்தரவின் பேரில் பென்னாகரம் காவல் ஆய்வாளர் முத்தமிழ்செல்வன் தலைமையில் 5 பேர் கொண்ட காவல் துறையினர் விரைந்து சென்று அரசு மது பாட்டிலை பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை கையும் களவுமாக பிடித்தனர்.
காவல்துறை வருவதை அறிந்து 2 பேர் தப்பி ஓடிய நிலையில் ஒருவரை காவல்துறையினர் பிடித்து அவரது வீட்டில் விற்பனை க்காக வைத்திருந்த சுமார் 150 மேற்பட்ட அரசு மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
பென்னாகரம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் விசாரணையில் ரவி மனைவி கிருஷ்ணம்மாள் (வயது 35) என்பது தெரிய வந்தது.
மேலும் விசாரணையில் தப்பி ஓடிய தலைமறைவான கமலஹாசன் மகன் ரவி (வயது 40), மாது மனைவி மகேஸ்வரி (41) ஆகிய 2 பேரையும் பென்னாகரம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்
