Police Recruitment

பெண் கொலையில் குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்

பெண் கொலையில் குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்

மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள காலாங்கரை பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு முட்புதரில் 58 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த நாகமலை புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் செல்லூர் கீழத்தோப்பு பகுதியை சேர்ந்த கல்யாணி என்பவரின் மனைவி ராஜாமணி என தெரியவந்துள்ளது.

இவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? நகை-பணத்துக்காக மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு உடலை வீசிச்சென்றார்களா? அல்லது முன் விரோதம் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த துப்பும் துலங்கவில்லை.

இதனால் கொலையாளிகளை பிடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் போலீசார் ராஜாமணி கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published.