
பாலக்கோடு பேருராட்சியின் 18 வார்டுகளிலும் இதுவரை 2976 நபர்களுக்கு நோய் கண்டறியப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பேருராட்சி தலைவர் பி.கே.முரளி தகவல்
தமிழக முதல்வரின் உயிர்காக்கும் உன்னதமான திட்டமான மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை மாண்புமிகு சுகாதார துறை அமைச்சர் அவர்களின் அறிவுரைகளின் படி தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி 18 வார்டுகளில் உள்ள மொத்தம் 7312 வீடுகளிலும் உள்ள 18 வயதிற்கு மேற்பட்ட 16761 நபர்களுக்கு பேரூராட்சி நிர்வாக உதவியுடன் பேரூராட்சி மன்ற தலைவர் திரு.P.K.முரளி அவர்கள் மேற்பார்வையில் 25.05.2023 முதல் 17.06.2023 இன்று வரை மருத்துவ சோதனை மேற்கொண்டதில் அதில் 1351 நபர்களுக்கு இரத்த அழுத்தம் 894 நபர்களுக்கு நீரிழிவு நோயும் 713 நபர்களுக்கு இவை இரண்டும் 15 நபர்களுக்கு பல வகையான புற்று நோய்களும் மற்றும் 3 நபர்கள் சிறுநீரக நோய்களும் என 2976 நபர்களுக்கு நோய் அறிகுறி கண்டறியப்பட்டு மருத்துவ குழுவின் பரிந்துரையின்படி தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவம் (MTm) என்ற திட்டத்தின் மூலம் மருந்துகள் வழங்கப்பட்டு வருவதுடன், அவர்களை தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி அவர்கள் தெரிவித்துள்ளார்.
