பொது இடத்தில் மது குடித்த 3 பேர் கைது
மதுரை பாண்டி கோவில் ரிங்ரோட்டில் சனி, ஞாயிற்று கிழமைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். வேண்டுதல் வைத்துள்ளவர்கள் உறவினர்களை அழைத்து வந்து கோவிலில் கிடாய் வெட்டி பூஜை செய்வது வழக்கம். இதனால் எப்போதும் கூட்டம் நிரம்பி இருக்கும்.
இந்தநிலையில் சிலர் பொது இடங்களில் மது அருந்தி பொதுமக்களுக்கு இடையூறு செய்துவந்தனர். இதனையறிந்த போலீசார் அந்தப்பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பொது இடத்தில் மது அருந்தி கொண்டிருந்த உத்தங்குடி அய்யணன் நகர் ஸ்ரீராமன்(வயது27), வாடிப்பட்டி கச்சைகட்டி பசும்பொன் நகர் ரமேஷ்(35), சுரேந்தர்(36) ஆகிய 3பேைர போலீசார் கைது செய்தனர்.