Police Recruitment

பாளையங்கோட்டை மத்தியச்சிறையில் உடல் நல குறைவால் இறந்த கைதியின் உடலை பெற்றுக்கொண்ட அவரது குடும்பத்தினர்

பாளையங்கோட்டை மத்தியச்சிறையில் உடல் நல குறைவால் இறந்த கைதியின் உடலை பெற்றுக்கொண்ட அவரது குடும்பத்தினர்

தென்காசி மாவட்டம் புளியங்குடி பஸ் நிலைய பகுதியை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மகன் தங்கச்சாமி(வயது 26). மாடசாமி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்

தங்கச்சாமி அப்பகுதியில் பெட்டிக்கடையில் வைத்து சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 11-ந்தேதி புளியங்குடி போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவர் பாளையங்கோட்டை மத்தியச்சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் திடீரென அவருக்கு உடல் நிலை கோளாறு காரணமாக திடீரென மயங்கி விழுந்தார்.

உடனே அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்த நிலையில் அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனை அறிந்த அவரது உறவினர்கள், தங்கச்சாமியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி புளியங்குடியில் உள்ள திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உடனடியாக போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், தென்காசி ஆர்.டி.ஓ. கங்காதேவி, துணை போலீஸ் சூப்பிரண்டு சுதிர், புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தை மூலம் போலீசார் மீது தவறில்லை என்பதை புரிந்து கொண்ட அவரது உறவினர் உயிரிழந்த தங்கச்சாமியின் உடலை பெற்று கொள்ள சம்மதித்தனர்
உயிரிழந்த தங்கச்சாமியின் தாயாருக்கு முதியோர் உதவி த்தொகை வழங்குவதற்கான உடனடி நடவடிக்கையை ஆர்.டி.ஓ. மேற்கொண்டார். மேலும் தங்கச்சாமியின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரண தொகை கிடைக்க செய்வதாக உறுதி அளித்தார். இதனால் அவரது உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர். மேலும் தங்கச்சாமி உடலை பெற்றுக்கொள்ளவும் சம்மதித்தனர். பின் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள தங்கச்சாமியின் உடலை பிரேத பரிசோதனைக்குப்பின் அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்..

Leave a Reply

Your email address will not be published.