
மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த வடையன்கிணறு கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (வயது64). இவர் விவசாய தொழில் செய்து வந்தார்.
இந்நிலையில் பாலக்கோடு பஸ் நிலையம் அருகே உள்ள உரக்கடையில் 5 கிலோ உரம் வாங்கி கொண்டு பி.டி.ஓ. அலுவலகம் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக முதியவர் மீது மோதியது.இதில் முதியவர் தலையில் பலத்த காயம் அடைந்து மயக்கமடைந்தார்.
உடனடியாக அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சை க்காக சேலம் கொண்டு செல்லும் வழியில் பரிதா பமாக உயிரிழந்தார்.
இது குறித்து பாலக்கோடு போலீசார் விபத்து குறித்து வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
