
பைக் மோதி கூலி தொழிலாளி பலி
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள கிருஷ்ணன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது55). கூலி தொழிலாளி.
இவர் நேற்று மாலை தனது மோட்டார் சைக்கிளில் பாலக்கோட்டிலிருந்து கிருஷ்ணன் கொட்டாய் நோக்கி தருமபுரி சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது கடமடை அருகே சென்ற பெரியசாமி திடீரென மோட்டார் சைக்கிளை திருப்பியுள்ளார். அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது.
இதில் பெரியசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த பாலக்கோடு போலீசார் உடலை கைப்பற்றி பால க்கோடு அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோ தனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
