
பசுமாடு திருடிய கணவன்-மனைவி கைது
எஸ்.எஸ்.காலனி தாமஸ் காலனியை சேர்ந்தவர் பெரிய முத்து (வயது39). இவரது பசுமாடு திருடுபோனது. அதே நாளில் அதே பகுதியில் விஷ்ணு என்பவரின் மாடும் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்யப்பட்டது. மேலும் பல்வேறு மாட்டுச் சந்தை நடைபெறும் இடங்களுக்கு சென்று தனது மாட்டை பெரியமுத்து தேடி வந்தார். அப்போது ஒட்டன்சத்திரம் மாட்டு சந்தைக்கு சென்றபோது, அவருடைய மாடு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். விசாரித்தபோது தனது மாட்டை கணவன்-மனைவி விற்பனைக்காக கொண்டு வந்தது தெரியவந்தது.
உடனடியாக அவர்களை எஸ்.எஸ்.காலனி போலீசில் ஒப்படைத்தார். போலீசாரின் விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் வேடசந்தூர் கிழக்கு தெருவை சேர்ந்த பெரியசாமி (38) மற்றும் அவரது மனைவி சத்யா (34) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைதுசெய்தனர்
