
தருமபுரியில் இரவு முழுவதும் போலீசார் வாகன சோதனை
தமிழக முழுவதும் ஆப்ரேஷன் ஸ்டோமிங் என இரவு முழுவதும் வரும் வாகனங்களை காவல் துறையினர் தீவிர வாகன சோதனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் தருமபுரி மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் வாகனங்களில் ஏதேனும் தடை செய்ய ப்பட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்றனவா? மேலும் ஆயுதங்களை குற்ற சம்பவங்களை செய்வதற்கு பயன்படுத்துவதற்காக யாரேனும் எடுத்துச் செல்கிறார்களா? அதேபோல் இரவில் வருகின்ற வாகனங்களில் போக்குவரத்து விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? ஓட்டுநர் உரிமம், மது குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுதல் போன்றவை குறித்தும் சோதனை நடத்தினர்.
அதேபோல் இரவு நேர வாகனங்களில் வருபவர்கள் ஏதேனும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வழக்கில் சிக்கி இருக்கிறவரா உள்ளிட்ட பல்வேறு நிலைகளிலும் காவல் துறையினர் நேற்று இரவு முதல் விடிய விடிய தேசிய நெடுஞ்சாலைகளிலும் தீவிர சோதனையை நடத்தினர்.
