



அருப்புக்கோட்டை நகர் போக்குவரத்து காவல் நிலையம் சார்பாக காரியாபட்டி அருகே உள்ள CEOA மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை நகர் போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் திரு.உ.செந்தில்வேல், சார்பு ஆய்வாளர் திரு.முருகன் ஆகியோர் கலந்து கொண்டு, சாலையில் பயணிக்கும் போது ஏற்படும் கவனக்குறைவால் ஏற்படும் விபத்துகள், விபத்தைத் தடுக்கும் நடவடிக்கைகள், கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

