மதுரை மாவட்டம் காளப்பான்பட்டி பகுதியில் கஞ்சா விற்றவர் கைது
மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வோருக்கு எதிராக தமிழக காவல் துறை இயக்குனர் அவர்கள் அறிவித்துள்ள 2.0 ஆபரேசன் படி தொடர் கடும் நடவடிக்கைகள் சட்டப்படி எடுக்கப்பட்டு வருகின்றது.
மதுரை மாவட்டம் சேடபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காளப்பான்பட்டி ஏரியாவில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட தனிப்படையினர் மற்றும் காவலர்கள் சோதனையில் ஈடுபடும்போது சட்டத்திற்குப் புறம்பாக கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த 1) வனப்பேச்சி (42/22) W/O ரவிச்சந்திரன் பேரையூர் தாலுகா, மதுரை மாவட்டம் என்ற நபரை கைது செய்தனர்.
மேலும் இது சம்பந்தமாக சேடப்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு எதிரி கைது செய்யப்பட்டனர் அவர்களிடமிருந்து கஞ்சா 25 Kg இதன் மதிப்பு ரூபாய் 3,00,000/- மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனமும்
(மாருதி கார்) பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை ஈடுபடுவோர், பதுக்குவோர் மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்கள் எச்சரித்து உள்ளார்கள்.