
அரசு அதிகாரிகளின் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க முடியுமா?
அரசு அதிகாரிகள் அரசூழியர்கள் பணி செய்து கொண்டிருக்கும் போழுது அவர்கள் பணியை முழுமையாக நிறைவேற்ற விடாமல் சமூக விரோதிகள் பிரச்சனையை ஏற்படுத்தி தடை செய்திடுவார்கள் ஏதாவது காரணங்காட்டி காவல் துறையில் புகார் கொடுத்து அவர்களின் வேலையில் பிரச்சனைகளை ஏற்படுத்தினர். இதனால் நிறைய அரசூழியர்கள் பணி செய்வதெற்கே அஞ்சிட ஆரம்பித்தனர். இது நம் நாடு சுதந்திரம் அடைந்த நாள் முதலே தொடர்ந்து வந்தது இறுதியில் 1973 ஆம் ஆண்டு ஒரு புதிய குற்றப்பிரிவு சட்டம் ஏற்படுத்தப்பட்டது அதுதான் CrPc 197 இந்த சட்டப்பிரிவின்படி ஒரு அரசு அதிகாரியின் மீது நேரடியாக காவல்துறை நடவடிக்கை எடுத்திட முடியாது (சில விதிவிலக்குகள் உண்டு) சம்பத்தப்பட்ட அரசு ஊழியர் பணிபுரியும் துறையின் உயர் அதிகாரிகள் விசாரணை செய்து பிரச்சனையின் தீவிரத் தன்மையைப் பொறுத்து சட்டப்படி நடவடிக்கை எடுத்திடவும் அனுமதி வழங்கிடுவார்கள்
சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் ஒரு உயர் மருத்துவ அதிகாரியின் மீது நடவடிக்கை எடுத்திட காவல்துறை ஒரு வழக்கை பதிவு செய்தது. சத்தீஸ்கர் மாநிலத்தில் பெண்களுக்கு குடும்பக்கட்டுபாடு சம்பந்தமான ஒரு மருத்துவ முகாம் அரசு மருத்துவ மனைகள் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை அதன் தலைமை மருத்துவ அதிகாரி ஏற்பாடு செய்திருந்தார்
நிறைய பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது அறுவை சிகிச்சைக்கு பிறகு வீட்டிற்கு சென்று சாப்பிட வேண்டிய மாத்திரைகளும் கொடுத்து அனுப்பப்பட்டன. அதில் 12 பெண்கள் மாத்திரைகள் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே இறந்து விட்டனர்.
ஆப்ரேஷன் செய்த தலைமை மருத்துவர் தான் செய்த அறுவை சிகிச்சையினால் அவர்கள் இறக்கவில்லை சாப்பிட்ட மாத்திரைகள்தான் காரணம் முறையாக விசாரணை செய்திட்டால் உண்மை தெரியவரும் என்று எவ்வளவோ மன்றாடியும் காவல்துறை அவரை கைது செய்து IPC 304, பிரிவின்படி குற்றம் சாட்டி செசன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தது.
அந்த தலைமை மருத்துவர் இந்த வழக்கை தள்ளுபடி செய்திட சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் மனு செய்திட்டார் குற்றம் சாட்டப்பட்ட மருத்துவ அதிகாரியின் சம்பந்தப்பட்ட துறையின் முழு விசாரணைக்கு பிறகு அவர் பணி செய்திடும் உயர் அதிகாரிகள் தான் முதலில் நடவடிக்கை எடுத்திட வேண்டும்
Crpc 197 பிரிவின்படி அரசு மருத்துவரின் மீது காவல்துறை நேரடியாக நடவடிக்கை எடுத்திடக் கூடாது என மனுதாரரின் கோரிக்கைக்கு ஏற்ற செசன்ஸ் நீதிமன்ற வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
