Police Recruitment

கிராமங்கள் தோறும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் A.முக்குளம் காவல்துறையினர்

கிராமங்கள் தோறும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் A.முக்குளம் காவல்துறையினர்

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில காலமாக குழந்தை திருமணம், பெண்கள் குழந்தைகள் காணவில்லை, போக்சோவில் இளைஞர்கள் கைது என தொடர்ந்து இது போன்று சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில்.

கிராமங்கள் தோறும் பொதுமக்களிடம் காவல் கண்காணிப்பாளர் உத்தரவுபடியும் திருச்சூழி உட்கோட்டம் காவல் துணை கண்காணிப்பாளர் அறிவுரைபடியும் விழிப்புணர்வு ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இன்று A. முக்குளம் காவல் நிலையத்தின் சார்பில் புல்வாய்கரை,
நேர்த்தியாயிருப்பு இடையபட்டி கிராம 100நாள் பணியில் இருந்த கிராம மக்களிடம் சார்பு ஆய்வாளர் அசோக்குமார் நேரில் சென்று பொது மக்கள் காவல் துறையினர் நல்லுறவை வளர்க்கும் வகையிலும்
பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அப்போது பேசிய சார்பு ஆய்வாளர் அசோக்குமார் குழந்தைகளிடம் பாலியல் துன்புறுத்தலில் யாராவது ஈடுபட்டாலோ , குழந்தைகளுக்கு வேறு எந்த பிரச்சினை இருந்தாலும் உடனடியாக 1098 என்ற சைல்டு லைன் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம்.

வேலைக்கு சென்று வரும் பெண்கள் பிரச்சினைகளை சந்தித்தால், அவர்களது பாதுகாப்பு உதவிக்கு என 181 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் காவல் நிலையம் செல்வதற்கு யாருடைய உதவி தேவை இல்லை என்று தனியாக யாருக்கும் பணம் கொடுக்கவும் தேவையில்லை என்றும் பிரச்சனை இதுவாயினும் நேரடியாக காவல் நிலையம் வருவது பற்றியும் மேலும் சந்தேகப்படும்படி யாரேனும் உங்கள் பகுதியில் இருந்தாலோ சட்ட விரோதமாக மது மற்றும் கஞ்சா விற்பனை செய்தாலோ அவர்கள் குறித்து உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

மேலும்இந்த நிகழ்ச்சியில் 100 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்
S.ரெங்கசாமி

Leave a Reply

Your email address will not be published.