மதுரை மாவட்டம், மேலூர் அருகே கிடாரிபட்டி பகுதியில் இளம் பெண்ணை கையைப் பிடித்து இழுத்த வாலிபர் கைது
மதுரை மாவட்டம், மேலூர் அருகே கிடாரிபட்டி பகுதியில் வசித்து வருபவர் பெரியகருப்பன், அழகுப்பொண்ணு இவர்களுக்கு பார்வதி வயது 20,( பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.) என்ற பெண் உள்ளார், கடந்த 26 ம் தேதி மாலை சுமார் 5 மணியளவில் இளம் பெண் பார்வதி வீட்டில் தனியாக இருந்த போது, அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் அழகேஷ் வயது 40/21, என்பவர் பார்வதியின் கையைப் பிடித்து இழுத்து தப்பாக நடக்க முயற்சி செய்துள்ளார், இதனை தொடர்ந்து பார்வதியின் தாயார் அழகுபொண்ணு வயது 35/21, அவர்கள் மேலூர் அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், புகாரை பெற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர் திருமதி. காஞ்சனாதேவி அவர்கள் வழக்கு பதிவு செய்து மேற்படி நபரை கைது செய்து விசாரணை நடத்தி நீதிமனறத்தில் ஆஜர் படுத்தினர், அதன்பின் நீதி மன்ற உத்தரவின்படி அழகேஷை சிறையில் அடைத்தனர்.
செய்தி தொகுப்பு மாநில செய்தியாளர் திரு. M. அருள்ஜோதி.
