Police Recruitment

கு.வி.மு.ச. 1973 இன் 357 வது பிரிவு நஷ்டஈடு (இழப்பீடு) அளித்தல் தொடர்பாக விளக்கியுள்ளது

கு.வி.மு.ச. 1973 இன் 357 வது பிரிவு நஷ்டஈடு (இழப்பீடு) அளித்தல் தொடர்பாக விளக்கியுள்ளது

(1) ஒரு நீதிமன்றம் ஒரு அபராதத்தை அல்லது (மரண தண்டணை உட்பட) ஒரு தண்டணையுடன் அபராதமும் சேர்த்து விதிக்கும்போது அந்த நீதிமன்றம் தீர்ப்புரை செய்யும்போது அப்படி வசூலிக்கப்படும் அபராதத் தொகை முழுவதும் அல்லது அதில் ஒரு பகுதியை

அ) குற்றத்தரப்பில் செய்யப்பட்ட செலவினங்களுக்காக

ஆ) அந்தக் குற்றத்தால் இழப்பு அல்லது தீங்கு உண்டாக்கப் பட்டவருக்கு அத்தகைய இழப்பீட்டை அவர் ஓர் உரிமையியல் நீதிமன்றத்தில் பெறக்கூடும் என்று அந்த நீதிமன்றம் கருதும்போது அவருக்கு அதனை இழப்பீடாக வழங்க

இ) ஒரு நபரை மற்றொருவருக்கு மரணம் உண்டாக்கியதற்காக அல்லது அதற்கு உடந்தையாக இருந்ததற்காக தண்டிக்கும்போது அத்தகைய நபரின் சார்பில் பயங்கர விபத்துக்கள் சட்டப்படி (பேடல் ஆக்ஸிடெண்ட்ஸ் ஆக்ட்) இழப்பீடு பெறக்கூடும் எனும்போது அத்தகைய நபர்களுக்கு இழப்பீடு வழங்க

ஈ) திருட்டு, கையாடல், நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் அல்லது கள்ளத்தனமாகத் திருட்டுப் பொருள்களைப் பெறுதல் தம் கைவசம் வைத்திருத்தல் அல்லது திருட்டுப் பொருள் என்று அறிந்திருந்தும் அவற்றை விற்பதற்கு செலவாணி செய்வதற்கு உதவ முன்வந்தவர்கள் ஆகிய குற்றங்களுக்காக ஒருவரை தண்டிக்குமபோது அதனால் உண்மை என்று நம்பி அந்தப் பொருளை விலைக்கு வாங்கி அதனால் இழப்புற்றவருக்கு ஈடு செய்ய பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிடலாம்

(2) அபராதம் விதிக்கப்பட்டுள்ள ஒரு வழக்கில் மேல் முறையீடு செய்வதற்கான வாய்ப்பிருக்கும்போது அத்தகைய மேல்முறையீடு செய்வதற்காக உள்ள காலம் முடியும் முன்னர் அல்லது அத்தகைய மேல் முறையீட்டின் முடிவு தெரியும் முன்னர் அத்தகைய தொகையை மற்றவருக்கு அளிக்கக் கூடாது

(3) ஒரு நீதிமன்றம் விதித்துள்ள தண்டணையில் அபராதம் இடம் பெறாதபோது அந்த நீதிமன்றம் தமது தீர்ப்புரையின்போது அத்தகைய இழப்பு அல்லது தீங்கு நேர்ந்துள்ளவருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை இழப்பீடாக எதிரி அந்தத் தீங்கு அல்லது இழப்புக்கு அவருடைய செயல் காரணமாக இருந்ததற்காக அளிக்க வேண்டும் என்று உத்தரவிடலாம்

(4) இந்தப்பிரிவின் கீழுள்ள ஓர் உத்தரவை மேல்முறையீட்டு மன்றமல்லது உயர் நீதி மன்றம் அல்லது அமர்வு நீதிமன்றம் தமது மேலாய்வு செய்யும் அதிகாரத்தைப் பயன்படுத்தி பிறப்பிக்கலாம்!

நன்றி
இரா.கனேசன்
அருப்புகோட்டை.

Leave a Reply

Your email address will not be published.