Police Recruitment

வாலிபருக்கு அரிவாள் வெட்டு

வாலிபருக்கு அரிவாள் வெட்டு

ராஜபாளையத்தில் ஆண்டத்தம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பாத்தியப்பட்ட மறவர் பொது சபை உள்ளது. இந்த பொது சபையில் கோவிலின் புதிதாக புணரமைக்கப்பட்ட கட்டிடம் மற்றும் கும்பாபிஷேகம் சம்பந்தமாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராஜவேல், பாண்டியன் என்ற சிபிராஜ் பாண்டி, தங்கப்பாண்டி ஆகிய மூன்று பேரும் ஆலோசனைக் கூட்டத்தை நடத்த விடாமல் இடையூறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதை அதே பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 55) என்பவர் கண்டித்துள்ளார். அப்பொழுது ராஜவேல் பாண்டியன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக பாலசுப்பிரமணியனை வெட்டி விட்டு தப்பிச் சென்றனர்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த பாலசுப்பிரமணியனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து தெற்கு காவல் நிலைய இன்ஸ்பெக் டர் சார்லஸ் மூன்று பேரின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தலைமறைவான மூன்று பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published.