Police Recruitment

போதை பழக்கம் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் இளைஞர்களுக்கு எஸ்.பி. அறிவுரை

போதை பழக்கம் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் இளைஞர்களுக்கு எஸ்.பி. அறிவுரை

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் பென்னாகரம் ரோடு பள்ளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டனர். இதில் இளைஞர்கள் அவரவர் தகுதிக்கேற்ப நிறுவனங்களின் வேலை வாய்ப்பினை தேர்ந்தெடுத்துக் கொண்டனர்.

மேலும் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், பேசுகையில் தருமபுரி மாவட்ட இளைஞர்கள் தவறான போதைப் பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகாமல் உரிய முறையில் வேலைவாய்ப்பு முகாமை பயன்படுத்திக் கொண்டு வேலைக்கு செல்லுமாறு வேண்டும்.

மேலும் தருமபுரி மாவட்டத்தை ஒரு போதை பழக்க வழக்கம் இல்லாத மாவட்டமாக படித்த இளைஞர்கள் மாற்ற வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

பின்னர் வேலை வாய்ப்பு முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்கள் மற்றும் காவலர்களுடன் போதை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பென்னாகரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மகாலட்சுமி, பாலக்கோடு உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சிந்து, மற்றும் காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published.