தென்காசி கடையநல்லூர் அரசு கல்லூரி மாணவர்களுக்கு பேரிடர் கால ஒத்திகை பயிற்ச்சி
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு கடையநல்லூர் அருகே உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ- மாணவிகளுக்கு மழைக்காலத்தின் போது நீர்நிலைகளில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களையும், கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களையும் மீட்பது எப்படி திடீரென ஏற்பட்ட தீயை அணைப்பது எப்படி, அவர்களுக்கு முதலுதவி மற்றும் சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்து ஒத்திகை நிகழ்ச்சி கடைய நல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
கல்லூரிகளின் முதல்வர் குமரன் தலைமை தாங்கினார். தீயணைப்பு நிலைய அலுவலர் ஷேக் அப்துல்லா மாணவ- மாணவிகளுக்கு பேரிடர் கால மீட்பு பணிகள் மற்றும் தீ தடுப்பு விழிப்புணர்வு குறித்து எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் தீயணைப்பு வீரர்கள், கல்லூரியின் பேராசிரி யர்கள் குருசித்திர சண்முக பாரதி, சண்முகப்பிரியா, சாம்சன் லாரன்ஸ், சண்முக வடிவு ஆகியோர் கலந்து கொண்டனர்.