போலியான பட்டாவை கொடுத்து பணத்தைப் பெற்றுக் கொண்டு பத்திர பதிவு செய்து கொடுக்காமல் நம்பிக்கை மோசடி செய்தவர்கள் கைது.
சென்னையைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் சென்னையில் சொத்து வாங்க வேண்டும் என்று புரோக்கர் ராஜா என்பவர் மூலம் என் ,48 ராமகிரி நகர், இரண்டாவது தெரு வேளச்சேரி சென்னை 6000 42 இல் உள்ள இடத்தினை பார்த்ததாகவும். அதில் ஐந்து வீடுகள் இருந்ததாகவும் அந்த வீட்டிற்கு சொந்தக்காரர்களான 1. பிரியா விஷா 2. சாகுல் ஹமீத் 3.O.A காஜா மொய்தீன் மற்றும் 4. மொய்தீன் அப்துல் காதர் ஆகியோர்களை சந்தித்து பேசிக்கு விலையாக ரூ.2,10,00,000/-என முடிவு செய்யப்பட்டதாகவும், அதில் ரூபாய் 71,00,000/- மும் பணம் கொடுத்து விற்பனை ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும் பின்னர் அந்த இடத்திற்கான பட்டாவினை புகாரிடம் கொடுத்ததாகவும், அந்த பட்டாவை வாங்கி புகாரை பார்த்தபோது பட்டா மேற்படி நபர்கள் பெயரில் இல்லை என்பதையும் அவர்கள் சொல்லியபடி மொத்த விஸ்தீரமான 2400 சதுர அடிக்கு பட்டா இல்லை என்பதும் அரசாங்க நில அளவை பட்டாவில் 1506 சதுர அடி பட்டா மட்டுமே உள்ளது என்பதை தெரிந்து கொண்டதாகவும், இது பற்றி புகார் அவர்களிடம் கேட்க முன்னுக்குப் பின் முரணாக கூறி அதன் பிழை ஏற்பட்டுள்ளதாகவும் அதனை சரி செய்து கொடுப்பதாக கூறி புகார்தாரரிடமிருந்து ரூ.71,00,000
வரை பணத்தைப் பெற்றுக் கொண்டு காலம் கடத்தி வந்து பட்டாவில் பெயர் எதுவும் மாற்றம் செய்யாமல் புகார் தாரரை நம்ப வைத்து மோசடி செய்து ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் போலி பட்டாவை கொடுத்து அதன் மூலம் ரூ.71,00,00/-பணத்தைப் பெற்றுக் கொண்டு இடத்தினை பத்திரப்பதிவு செய்து தராமலும் ஏமாற்றி வருவதாகவும் நடவடிக்கை எடுக்குமாறு கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை செய்யப்பட்டுள்ளது.
புலன்விசாரணையில் பிரியா விசா மற்றும் அவரது கணவர் ஷாகுல் ஹமீது ஆகியோர் திட்டமிட்டு புகார் நம்ப வைத்து ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் மோசடி செய்து கூட்டு சதி செய்து என், 48 ராமகிரி நகர் இரண்டாவது தெரு வேளச்சேரி சென்னை -600042 உள்ள 2400 சதுர அடி கொண்ட ஐந்து வீடுகளுடன் கூடிய இடத்தினை பத்திரப்பதிவு செய்து தராமல் ஏமாற்றியது புலன்விசாரையில் தெரியவந்தது.
இவ்வழக்கில் தொடர்புடைய எதிரிகளை கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. சந்தீப் ராய் ரத்தோர் இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவுEDF-1 காவல் உதவி ஆணையாளர் அவர்களின் தலைமையிலான காவல் குழுவினர் மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த பிரியா விஷா பெ/வ 38 க/பெ சாகுல் ஹமீது நெ ,5 ,2 வந்து மாடி நெ,48, ராமகிரி நகர் 2வது தெரு வேளச்சேரி, சென்னை- 600042 திரு .சாகுல் ஹமீது ஆ/வ 58 த/ பெ சௌகத் அலி நெ,5,2 வந்து மாடி,நெ,48, ராமகிரி நகர் 2வது தெரு வேளச்சேரி சென்னை- 42 ஆகியோரை 17. 7. 2023 ஆம் தேதி கைது செய்து கனம் நடுவர் CCB & CBCID நீதிமன்றம் எழும்பூர் அவர்களிடம் ஆசை படுத்தி நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்.