Police Recruitment

மதுரை அவனியாபுரம் பகுதியில் இளம்பெண்-வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

மதுரை அவனியாபுரம் பகுதியில் இளம்பெண்-வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

மதுரை அவனியாபுரம் வள்ளல் ஆனந்தபுரம் ஜே.ஜே. நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி மாலினி (வயது 24). இவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இந்த நிலையில் குடும்பப் பிரச்சினையால் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மாலினி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவனியாபுரம் போலீசில் மாலினியின் தந்தை கருப்பையா புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மிளகரணை நாகம்மாள் தெரு வடக்கு தெருவை சேர்ந்தவர் மணி (50). இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இவர் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மணி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மனைவி நாகம்மாள் கொடுத்த புகாரின் பேரில் கூடல் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published.