மதுரை, மீனாட்சியம்மன் கோவில் அருகே மாடியிலிருந்து கீழே விழுந்த பெண் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்
மதுரை மீனாட்சியம்மன் தெற்கு கோபுரம் எதிரே சொக்கப்பநாயக்கர் தெருவில் மனநலம் பாதிக்கப்பட்ட சாவித்திரி என்ற பெண் கணவனை பிரிந்த நிலையில் தனது தம்பியின் வீட்டில் தங்கி வந்துள்ளார். இந்த நிலையில் சாவித்திரியின் தம்பி குடும்பத்தினருடன் வெளியில் சென்றிருந்த நிலையில் தனியாக வீட்டிலிருந்த சாவித்திரி திடீரென வீட்டின் இரண்டாவது மாடியிலிருந்து விழுந்ததாக கூறப்படுகிறது.
மாடியிலிருந்து விழுந்த போது வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது விழுந்ததால் முதுகுத்தண்டில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகே கோவில் பாதுகாப்பு பணியிலிருந்த காவல் துறையினர் சாவித்திரி அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று நலமாக உள்ளார்கள்
