மரங்களை வெட்டுவது குற்றமா?
இந்திய வனச்சட்டம் 1927 -படி யாரேனும் ஒருவர் வனத்துறையில் அனுமதியின்றி மரத்தை வெட்டினால் அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்படும். அதாவது குற்றம் சாட்டப்பட்டவருக்கு 10,000 அபராதம் அல்லது 3 மாதம் சிறை தண்டனை வழங்கப்படும்.
அபராதம் மரத்தில் வயதை பொறுத்தும் மற்றும் மரத்தின் மதிப்பை பொருத்தும் மாறுபடும்.
ஒருவர் அரசாங்கத்திற்கு சொந்தமான நிலங்களை வெட்ட விருப்பினால் அதற்கு முறையான அனுமதி அளிக்கப்பட்டால் மட்டுமே மரங்களை வெட்டமுடியும்.
முதலில் மரங்களால் அவர்களுக்கு என்ன அச்சுறுத்தல் ஏற்படுகிறது என்பதை விண்ணப்பமாக எழுதியும் அதனை புகைப்படமாக எடுத்து வனத்துறை அலுவலகத்தில் அளிக்கவேண்டும். அவர்கள் அதை பரிசோதித்து அதன் பின் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று சரியாக ஆராய்ந்து அதன் பின் அவர்கள் அனுமதி அளித்தால் மட்டுமே நீங்கள் மரங்களை வெட்ட முடியும்.