

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிருக்கு போராடிய இருவரை காப்பாற்றிய போலீசார்!
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆயுஸ் ஜெயின் (24) இவரது தோழி கோமளி குமாரி (21) இவர்கள்
பெங்களூருவில் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். இருவரும் இவர்கள் நண்பர்கள் இரண்டு பேருடன்
நேற்று தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தனர். பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்த நண்பர்கள் நான்கு பேரும் ஆலம்பாடி காவிரி ஆற்றில் குளித்தனர் அப்போது ஆயுஷ் ஜெயின், கோமளி குமாரி ஆகிய இரண்டு பேரும் ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்றனர் பின்னர் அவர்கள் கரைக்கு திரும்ப முடியாமல் தண்ணீரில் தத்தளித்தனர் இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் கூச்சலிட்டனர் இதையடுத்து அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்
திரு.சுப்பிரமணியன் மற்றும் ஊர்க்காவல் படை வீரர் திரு.ராகுல் ஆகியோர் விரைந்து ஆற்றில் நீந்தி சென்றுதத்தளித்த இரண்டு பேரையும் காப்பாற்றி கரைக்குக் கொண்டு வந்து முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் தெரிந்து உயிரை பணயம் வைத்து உடனடியாக ஆற்றில் குதித்து இருவரையும் காப்பாற்றிய காவலர்களை போலீசார் மற்றும்
பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
