
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 3 கொள்ளையர்கள் கைது
திருமங்கலம் அடுத்த கள்ளிக்குடி லாலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாயகிருஷ்ணன் மகன் அருண்பாண்டியன்(வயது 25). இவர் காரியாபட்டியில் உள்ள சாம்சங் கம்பெனியில் ஏ.சி. மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார் .
சம்பவத்தன்று அருண் பாண்டியன் காரியாபட்டியில் வேலையை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு புறப்பட்டார்.
கள்ளிக்குடி- டி.கல்லுப்பட்டி ரோட்டில் வடக்கம் பட்டி பிரிவு அருகே சென்ற போது 3 பேர் திடீரென வழிமறித்து மிரட்டினர். பின்னர் அருண் குமார் பையில் இருந்த ரூ.500 பறித்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்து தப்பினர்.
கள்ளிக்குடி காமாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த சரவணன்(38). லோடு மேனான இவர் வில்லூர் கிராமத்தில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று மோட்டார் சைக்கிள் வந்த இவரை 3 பேர் மிரட்டி ரூ. ஆயிரம் பறித்து சென்றனர்.
இதுகுறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் 2 வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டது ஒரே கும்பல் என தெரியவந்தது. இதைய டுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட விருதுநகர் ஆலம்பட்டியை சேர்ந்த கிஷோர், பிரவீன் குமார், மாரீஸ்வரன் ஆகியோ ரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் பல்வேறு இடங்களில் நகை -பணம் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங் களில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது. இதன் அடிப்படை யில் விசாரணை நடந்து வருகிறது.
