கொலை வழக்கில் தொடர்புடைய நான்கு நபர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த திண்டுக்கல் மாவட்ட காவல் துறையினர்.
16.12.2020 திண்டுக்கல் மாவட்டம் நகர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாரதிபுரம் பகுதியில் கடந்த மாதம் செல்வராஜ் 29 என்பவர் 4 பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டார் இதையடுத்து நகர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.மணிமாறன் அவர்கள் தலைமையில் போலீசார் விசாரணை செய்து சைமன் ராஜ் (23), மாதவன் (23), பிரசாந்த் (24), மணிகண்டன் (24) ஆகிய 4 நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதைத்தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா இ.கா.ப அவர்களின் பரிந்துரையின் பேரில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திருமதி.விஜயலட்சுமி இ.ஆ.ப அவர்கள் 4 நபர்களையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து நான்கு நபர்களும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
