மதுரை மாநகர் போக்குவரத்து காவல் மற்றும் தனியார் இருசக்கர வாகன நிறுவனம் இணைந்து தலைக்கவசம் விழிப்புணர்வு
மதுரை மாநகர் போக்குவரத்து மற்றும் தனியார் இருசக்கர வாகன நிறுவனம் இணைந்து ஆடி பெருக்கு முன்னிட்டு இன்று எடுக்கும் வகனங்களுக்கு தலைக்கவசம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைவருக்கும் மதுரை மாநகர் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் டவுன் திரு. செல்வின் அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது.
மதுரை தெற்குவாசல் பாலத்தின் கீழ் வாலிபர் பிணம் கொலையா போலீசார் விசாரைணை மதுரை தெற்கு வாசல் பாலத்தின் கீழ் நேற்றிரவு வாலிபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். மதுரை தெற்கு வாசல் மேம்பாலத்தின் கீழ் செல்லும் மதுரை ராமேஸ்வரம் செல்லும் ரயில்பாதையில் நேற்றிரவு 7.15 மணியளவில் வாலிபர் பிரேதம் கிடப்பதாக தெற்கு வாசல் போலீசாருக்கு தகவல் வர சம்பவ இடத்திற்கு விரைந்து போலீசார் சென்று பார்க்கையில் 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் தண்டவாளத்தில் அடிபட்டு இறந்து கிடந்துள்ளார்.போலீசாருக்கு வாலிபர் […]
கடலூர் அருகே வீட்டுக்குள் பூட்டி வைத்து பெண் மீது தாக்குதல் கடலூர் அருகே வீட்டிற்குள் பூட்டி வைத்து பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கடலூர் அடுத்த காராமணிக் குப்பத்தை சேர்ந்தவர் சுமதி (வயது 50). இவர் சம்பவத்தன்று கூத்தப்பாக்கத்தில் குமார் என்பவரின் வீட்டில் வாடகைக்கு செல்வதற்காக வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று சுமதி மற்றும் அவருடன் இருந்த 3 பெண்களையும், ராணி மற்றும் சேகர் தாக்கி வீட்டுக்குள் அடைத்து பூட்டி வைத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி […]
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே விழிப்புணர்வு நிகழ்ச்சி சிவகிரி அருகே தேவிபட்டணம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் வரதட்சணை தடுப்பு சட்டம், குடும்ப வன்முறை தடை சட்டம், குழந்தைகள் திருமண தடை சட்டம், சமூக நலத்துறை திட்டங்கள், ஒருங்கிணைந்த சேவை மைய செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராமராஜ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மாடசாமி, செயலர் பொன் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் […]